ஞாயிறு, மார்ச் 25, 2012

ஒரு பெரும் செயல்!

யாழ் ஐ.டி எனும் தன்னார்வு முனைப்பு அமைப்பு பற்றி என்னை தனிப்பட்ட முறையில் தெரிந்த பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். எழுத்தின் வழி மட்டும் வாலிபனை வால் பிடிக்கும் யாரவது இருப்பின், முன்பு ஒரு பதிவிலும் தொடர்பான பின்னூட்டத்திலும் யாழ் ஐ.டி பற்றி குறிப்பிட்டதை கண்டிருப்பீர். அதை அதிகம் தெரியாமல் இந்த கடிதத்தை வாசிப்பவர்கள் அதன் அறிமுகத்திற்க்காய் கிழே சொடுக்கவும்,
  1. அதிகார பூர்வ வலைத்தளம்: http://yarlithub.org/
  2. ஒரு ரசனையான அறிமுகம்: http://yarlithub.org/WhoWeAreTamil.php அல்லது http://www.padalay.com/2011/12/yarl-it-hub-silicon-valley.html
  3. இதன் கனாக் காணருடன் ஒரு நேர்முகம்: http://www.padalay.com/2012/03/01-03-2012.html
  4. ரசிகையின் அங்கலாய்ப்பு: http://www.rasikai.com/2012/03/blog-post_08.html
  5. கனவுகளுக்கான நம்பிக்கை: http://sayys365.blogspot.com.au/2012/03/yit-meet-up-analytical-game-part-2.html
  6. கேலிச்சித்திரம்: http://www.rasikai.com/2012/02/blog-post_27.html
இத்தனை (6) அழகியலுக்கும், இத்தனை காலத்திற்கும் பிறகு எழுதுவதற்கு என்ன இருக்கு, இது விட்டில்த்தனமா, வியாபாரமா, இல்லை வியாகூலமா ?
Simple, என் கண்கள் சொருக மறந்ததற்க்கும், ஒரே கனவு திரும்ப திரும்ப தொல்லை பண்ணுவதற்கும், pizza செரிக்காமல் போனதற்கும், மனச்சாட்சியுடன் ஏற்ப்பட்ட மணமுறிவுக்கும் மருந்து தேடும் முயற்சி.

YIT அல்லது இதுமாதிரியான ஆக்க முயற்சிகளை நோக்கி நீளும் எல்லாத் தமிழ்ப் பெரும் கைகளுக்கும் இந்தக் கடிதம் முகவரி இடப்படுகிறது.........

yarl it
"ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் - ஒரு பெரும் செயல் செய்வாய், வா! வா! வா!"
பெரும் குழப்பத்துக்கும், மயக்கத்துக்கும் மத்தியிலே, கண்கள் நிறைய கனவும் தோள்கள் நிறைவும் தினவும் கொண்ட, மேலே நகரும் வழி தெரியாத / இல்லாத, என் ஆருயிர் பொறியியல் தம்பிகளுக்கு,
ஏறக்குறைய அதே நிலைப்பாட்டில் இருக்கும் அண்ணன் எழுதிக் கொள்வது.

எங்கெங்கே எல்லாம் தர்மம் வலுவிழந்து அதர்மம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் நான் அவதரிக்கிறேன் என்று கண்ணன் சொன்னதாக கீதை சொல்கிறது. இதுக்குள் இருக்கும் சடங்குகளை ஒதிக்கி விட்டு சங்கதியை பாரு. எப்பெப்போ சவால் முன் வருகிறதோ அப்பப்போ உன்னை ஹீரோ ஆக்கிக்கொள்ள (ஒரு பெரும் செயல்) ஒரு வாய்ப்பு. சவால் அதிகமாக அதிகமாக உனக்கு கிடைக்க இருக்கும் வெகுமதியும் அதிகரிக்கும் - exponentially.

தயாராகு, இத்தனை கால ஆகுதியும், இதனை கால காத்திருப்பும் வழி சமைத்து, இதோ அலிபாபா குகை, திறக்கத் தயாராக - நீ தயாராகு. குகையை தேடி மந்திரம் கற்று புதையலை வெல்ல நீ தயாராகு. கைகளை பரபர என்று தேய்த்து, கண் இடுக்கி, புத்தி ஒருகண் சேர்த்து, கால் உதைத்து ஒரு பெரும் செயல் செய, ஒரு பெரும் விழாக் கொண்டாட தயாராகு. வெற்றிக்குப்பின் சரசங்களையும் சம்பிரதாயங்களையும் வைத்துக் கொள்ளலாம். இப்போதைக்கு கிளியின் கழுத்தில் அம்பு நுனி நுழைய வேண்டிய பகுதியில் மட்டும் உன் கவனம் இருக்கட்டும்.

ஆண்டாண்டு காலமாக உன் அண்ணன், அண்ணனுக்கு அண்ணன், பாட்டன், அவன் பாட்டனுக்கு பாட்டன் எல்லாம் செய்த வித்தை தான் உன் இரத்தம் நாடி நரம்பு எல்லாம் ஊறிப்போன சித்து - இந்தக் கணக்கு. இது பப்பால ஏத்தும் வழக்கமான பம்மாத்து இல்லை; உசுப்பேத்தும், உணர்ச்சிகளை கிளற வைக்கும், உள்ளீடற்ற அரசியல் அல்ல, முறையான சான்றுகளுடனும் செரியான புள்ளிவிவரங்களுடனும் நிரூபிக்க கூடிய உன் சமூகத்தின் இயல்பு.

ஒவ்வொரு சமூகத்திற்கும் அதுக்கெண்டு தனியான இயல்பு உண்டு- அது தான் அதை சமூகமாக group selection வழி நவீன கூர்ப்பு தத்துவத்திற்கு அமைய வாழ வைத்தது. இதில் பெருமைக்கும் சிறுமைக்கும் ஆன எல்லா குணாம்சங்களும் உள்ளடக்கம்.

வாழுவியல் ஆதாரங்கள்:
உனக்கு நினைவிருக்கா, சின்ன வயதில் தேத்தண்ணி குடிக்கும் ஒரு பின்னேரம், அம்மா பகோடாவை ஆளாளுக்கு பிரித்த பகிந்த படி, வேம்பு சாமரம் வீசும் மண் முத்தம், ஊஞ்சலிலும் சூடான சீமந்துக் குந்திலும் நாங்கள் எல்லாம் தேயிலையின் வாசத்தை நுகர்ந்தபடி, என்ன பேசுவோம் எண்டு: நடிகைகளோ, நாலாம் வீட்டின் நாலு பேருக்கு தெரியாத சங்கதியோ, விரிவான நாட்டு நடப்போ அல்ல; புதிர்கள், கணக்குகள், கணக்குகள், புதிர்கள்.

ஆடுகடிக்காமல் புல்லும், புலி கடிக்காமல் ஆடும் அந்தக் கரைக்கு போவது எப்படி?; பத்துக்குள் ஒரு எண்ணை மனதுக்குள் நினைத்துக்கொள் அதை ரண்டால் பெருக்கி ரெண்டைக் கூட்டி மூன்றால் பெருக்கி கூட்டி விடை சொல் - நீ நினைத்தது இதுதானே; ஏழு நாணயங்கள் ஒரு முள்ளுத் தராசு ஒரு நாணயம் மட்டும் பளுவில் குறைவு இரண்டே தவணையில் எப்படி கண்டு பிடிப்பது. பெரும்பாலான எம்மைப் போன்ற யாழ்ப்பாணத்து சிறார்களுக்கு இந்தக் கணக்குகளும் புதிர்களும் அத்துப் படி என்பது நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்லை. ஆனால் நாஙள் இவற்றைப் பேசி நிறைய வருடங்களுக்கு பிறகு கணணி விஞ்ஞானம் கற்கும் போது, algorithm படிக்கும் போது, தொடர்ந்து இந்தத் துறையில் பணியாற்றுகையில் problem solving இன் விற்பனை விலை தெரியும் போது, இந்த அத்திவாரத்தை குடும்ப வழமைக்குள் வித்திட்டவர்களை - எங்கள் மூதைகளை - கண்மூடி பிரார்த்தித்துக் கொண்டேன்.

பின்னொரு மழை நாளில், வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு பொரித்த பருப்பு வடையும் வெறும் தேத்தண்ணியும் சுவைத்தபடி, ஊறும் நிலத்தின் மேல் சாக்கு விரித்து அதன் மேல் பாய் விரித்து, இரவிரவாய் சிமினி விளக்கு வைத்துக்கொண்டு அம்மமாவுடன் முன்னூற்றிநாலு விளையாடியது மறந்திருக்க மாட்டாய். அவவோடு விளையாடுவது இலகல்ல, துரும்பு எண்ணோணும், மேசை கவனம் வேணும், மடித்த பிடி பாக்க ஏலாது, போன பிடியில் இந்த கார்டை போட்ட படியால், டயமண்ட் ஒப்பின் பண்ணும போது களித்த படியால் ஆடித்தன் ஜெக் எங்க இருக்கெண்டு ஊகிக்க தெரியாமல் முழிக்க முடியாது. அதுவும் கணக்கு, மனக் கணக்கு - find - S algorithm / decision tree / probability : machine learning இன் அடிப்படை எல்லாம் 304, அந்த lectures முழுதும் அம்மம்மா நினைவாய், அவ்வப்போ அவ சுடும் தோய்ப்பனும்.

வேலி போடும் போது, பொங்கலுக்கு உலக்கை வைச்சு சிவப்பும் வெள்ளயுமா கோலம் போடும் போது, சயிக்கில் கம்பி, முள் முருங்கை செத்தல் பிடி -> வெடி, சாமிக்கு வாகனம் கட்டும் போது, சகடயில பெரிய திருவாசிய பலன்சு பண்ணேக்கை, லவுஸ் ஸ்பீக்கர் போட்டு கோவிந்தராஜனை அலறவிடேக்க, பழைய ரேடியோ உடைச்சு மைக் செய்யேக்க, பங்கர் வேட்டேக்க, அதுக்கு குத்தி அடுக்கி மண் மூட்டை வைச்சது, துலா, கப்பி - அதுக்கு எண்ணை விடுறது, oven இல்லாமல் கேக் சுட்ட அம்மா, tin-milk ஐ உரலில் தேய்த்து ஓப்பின் பண்ணும் வித்தை, உப்பு போட்ட ஜாம் போத்தல் விளக்கு........ எண்டு எங்களை எதோ இதுக்கே நேர்ந்து விட்ட மாதிரி நாங்கள் விஞ்ஞானமும், கணக்கும், பொறியியலும் சேர்ந்த வாழுவியலை வாழ்ந்தோம். இந்த வித்தை, இந்த சித்து எங்களுக்கு எங்கள் பாட்டிக்கு அம்மாக்கு ஆட்டுக்குட்டிக்கு எண்டு எல்லத்தரப்பிலும் சொல்லி, பயின்று, கை வந்தது. உன் நாடி நரம்பு புத்தி சித்தம் எல்லாம் ஊறிப்போன ஒன்று. இது உன் வலிவு என்பதை விட உன் இயல்பு - தயவு செய்து புரிந்துகொள்.

அனால் இந்த பழம் பெருமை, ஏறு பட்டி தலை நார் எல்லாம் merit list தாண்டி என்னத்தை செயதம் எண்டு கேக்குறியா. கவலைப் படாதே எங்கள் கனவுகள் engineering entrance குறிப்பாய் merit list என்று ஒடுக்கமானதல்ல. வைரமுத்து சொன்னப்போல
"எம் கண்களில் இருக்குற கனவும் தோள்களில் இருக்குற தினவும் ஒரு கிரகத்தையே படைக்க வல்லது".

நாடும், நாடு கடந்தும் என்ன ஒரு கிரகமே உனக்கு சொந்தமாகும் வழி சொல்கிறேன் கேள்.

ஆதாரங்கள் தொடரும்.....


ஒளி படத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

....... ....... ...... ....... ....... ......
....... ....... ...... ....... ....... ......
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழும சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே - நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா
- சுப்பிரமணிய பாரதி

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

wow..this is awesome intro for IT-Hub

ஜேகே சொன்னது…

முக்கியமான பதிவு வாலிபன் ..

எனக்கு ஒரே ஒரு சின்ன மனவருத்தம், இப்படி நாங்கள் evangelism செய்யும்போது எல்லோரும் ஆதரவு தெரிவித்தாலும், அதற்கு பிறகு பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை ... உதாரணமாக செயல்திட்டங்களுக்கு வெறும் facebook ஆதரவு மட்டுமே. yschool project க்கு ஆட்கள் காணாது.. யாழ்ப்பாணத்தில் மென்பொருள் prodigies ஐ கண்டுபிடித்து ட்ரெயின் பண்ணுவதற்கு யாரும் நிதி தர தொடர்பு கொள்ளவில்லை ... பார்ப்போம்

Ketha சொன்னது…

எண்களுக்கும் எங்களுக்குமான இந்த நுணுக்கமான இறுக்கமான பிணைப்பை அழகாக சொல்லி இருக்கிறியள். வேலை தேடுறதெண்ட ஒரு சின்ன வட்டத்துக்குள்ள தொலைந்து போகிற எங்கட சமுகம், அதுக்கு அப்பால் எங்கட இந்த திறமை பயன்படக்கூடியது என்கிற உண்மை புரியவேணும். எதுவும் தொடங்கும்போது சிறியதாய்தான் இருக்கும். தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

ஜேகே சமயங்களில் நான் FB like ஐ நிறைய வெறுக்குறேன். அது மோசமான சோம்பேறித்தனம், கருத்து சுதந்திரத்தின் மீதான ஒரு fancy அடக்கு முறை.

எஸ் சக்திவேல் சொன்னது…

அருமை!

-------------
(நான் திருந்திவிடேன்!. ஆறுதலாக வாசித்துக் கருத்துச் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். 'அடி' மேல் 'அடி' வாங்கி இப்ப கீ போர்ட்டில் கை வைக்கவே 'திக்' என்று இருக்குது. அத்தோடு இப்ப 'அனுமதிக்கப்பட்ட சொற்களை மட்டுமே பாவிக்கவேண்டும் என்று மேலிடத்து உத்தரவு)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சக்தி அண்ணை :)

கருத்துரையிடுக